ஐபிஎல் 2024 : சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 வீரர்கள்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்


ஐபிஎல் 2024 : சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 வீரர்கள்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்
x

Image; PTI 

அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களின் வீரர்களை பரிமாற்றிக்கொள்ளலாம். மேலும், வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கலாம்.

இந்த நிலையில் , அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகிய 8 வீரர்களை சென்னை அணி விடுவித்துள்ளது.

இதனால் கேப்டன் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது.



Next Story