ஐபிஎல் 2024; லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்..!


ஐபிஎல் 2024; லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்..!
x

Image Courtesy: AFP

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நவம்பர் 15ம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தங்களுக்குள் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட்டை மும்பை இந்தியன்ஸ் ரூ.50 லட்சத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.



Next Story