ஐ.பி.எல். அணிகளில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் இணைவது தாமதம் - காரணம் என்ன..?


ஐ.பி.எல். அணிகளில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் இணைவது தாமதம் - காரணம் என்ன..?
x

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

கேப்டவுன்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு 2 நாட்கள் முன்பாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் ரபடா, மார்க்ரம், மில்லர், நோர்டியா, குயின்டான் டி காக் உள்ளிட்ட தென்ஆப்பிரிக்க வீரர்கள் தங்களது ஐ.பி.எல். அணிகளுடன் இணைவார்கள் என்று முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்க அணி உள்நாட்டில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2-ந்தேதி நெதர்லாந்துக்கு எதிராக இரண்டு ஒரு நாள் போட்டிகளில் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தென்ஆப்பிரிக்க அணியால் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால் தென்ஆப்பிரிக்க முன்னணி வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர். இதன் காரணமாக, சற்று தாமதமாக ஏப்ரல் 3-ந்தேதி தான் தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஐ.பி.எல். அணிகளில் இணைவார்கள் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story