ஐபிஎல் இறுதி போட்டி: 3.2 கோடி பார்வைகளை பெற்று உலக சாதனை படைத்த ஜியோசினிமா
ஜியோசினிமா செயலியில் ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அகமதாபாத்,
16-வது ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக ஜியோசினிமா தெரிவித்து உள்ளது. ஜியோசினிமா செயலியில் டாடா ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஜியோசினிமா, நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2019 ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியினை அதிகம் பேர் பார்த்தனர். கடந்த மே 23-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியினை 2.5 கோடி பேர் பார்வையிட்டது அதிகமாக இருந்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
Highest peak viewership on JioCinema:
— Johns. (@CricCrazyJohns) May 29, 2023
CSK vs GT - 3.2 crore
MI vs GT - 2.5 Crore
CSK vs GT - 2.5 Crore pic.twitter.com/iWQVeN2API