ஐபிஎல்: மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்


ஐபிஎல்: மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்
x
Muthu Manikannan S 15 Dec 2023 1:08 PM GMT (Updated: 15 Dec 2023 1:11 PM GMT)

ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது

மும்பை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. .

இந்த நிலையில் , அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது. இதையடுத்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், ரோகித் சர்மாவிற்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story