வார்னர் , ரிஷப் பண்ட் அரைசதம்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 191 ரன்கள் குவிப்பு


வார்னர் , ரிஷப் பண்ட் அரைசதம்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 191 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 31 March 2024 3:48 PM GMT (Updated: 31 March 2024 3:56 PM GMT)

சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் இரவு நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா , டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். இருவரும் சென்னை அணி பந்துவீச்சை துவம்சம் செய்து டெல்லி அணிக்கு ;நல்ல தொடக்கம் கொடுத்தனர்.தொடக்க விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதமடித்த டேவிட் வார்னர் 52 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து பிரித்வி ஷா 43 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் மிட்சேல் மார்ஷ் , ஸ்டப்ஸ் இருவரும் பதிரனா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ரிஷப் பண்ட் நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்ட ரிஷப் பண்ட் அரைசதமடித்து ஆட்டமிழந்தார்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தொடர்ந்து 192 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.


Next Story