இரானி கோப்பை கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 484 ரன்கள்


இரானி கோப்பை கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 484 ரன்கள்
x

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 121.3 ஓவர்களில் 484 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

குவாலியர்,

முன்னாள் ரஞ்சி சாம்பியன் மத்தியபிரதேசம்-இதர இந்தியா (ரெஸ்ட் ஆப் இந்தியா) அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குவாலியரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் எடுத்து இருந்தது. சவுரப் குமார் ரன் எதுவும் எடுக்காமலும், பாபா இந்திரஜித் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த சவுரப் குமார் ரன் ஏதுமின்றியும், பாபா இந்திரஜித் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த யாஷ் துல் (55 ரன்) தவிர யாரும் நிலைக்கவில்லை. ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 121.3 ஓவர்களில் 484 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மத்தியபிரதேசம் தரப்பில் அவேஷ்கான் 4 விக்கெட்டும், அனுபவ் அகர்வால், குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி ஆட்ட நேரம் முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்ஷ் காவ்லி 47 ரன்னுடனும், யாஷ் துபே 53 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

1 More update

Next Story