விராட் கோலி போல நடந்து காட்டிய இஷான் கிஷன் - வைரலாகும் வீடியோ...!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது.
கொழும்பு,
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிய கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக களத்தில் நின்று கொண்டு பேசி வந்தனர். அப்போது இஷான் கிஷன், விராட் கோலி போல நடந்து காட்டினார்.
அதை பார்த்த விராட் கோலி என்னை மாதிரி நடப்பதாக கூறி, கிண்டலாக அவரும் நடந்து காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தண்ணீர் கொடுக்க வந்த வீடியோ ஒன்று வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.