சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு
x
தினத்தந்தி 15 Aug 2023 4:05 PM IST (Updated: 15 Aug 2023 4:30 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 2020-ல் ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களுக்கு வியப்பை கொடுத்தது.

ராஞ்சி,

கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி, 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கிய தோனிக்கு இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அரை இறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. அந்தப் போட்டியில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணி அரை இறுதியோடு அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதன்பிறகு ஓய்வு குறித்த எந்த அறிவிப்பையும் தோனி சொல்லாமல் இருந்தார்.

அந்த சூழலில் தான் கடந்த 2020-ல் ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களுக்கு வியப்பை கொடுத்தது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் வழிநடத்தி வருகிறார். தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவரது பழைய பேட்டிங் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் தோனி டிரெண்டிங்கில் உள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தோனி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், "உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணி முதல் நான் ஓய்வு பெற்றுவிட்டதாக கருத்தில் கொள்ளுங்கள்" என தெரிவித்து இருந்தார்.


Next Story