டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதே கடினம் - கபில் தேவ்


டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதே  கடினம் - கபில் தேவ்
x

இந்தியா தனது முதல் போட்டியில் வரும் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது.தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 8 ணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு 8 அணிகள் இரு பிரிவுகளாக விளையாடி வருகின்றன. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. சூப்பர் 12 சுற்று நாளை தொடங்க உள்ளது.

இதில் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.

உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணியின் வாய்ப்புகள் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் கூறியதாவது :

ஆல்-ரவுண்டர்கள் எந்த அணிக்கும் முக்கிய வீரர்கள், அவர்கள் ஒரு அணியின் பலமாக மாறுகிறார்கள். ஹர்திக் போன்ற ஆல்ரவுண்டர் ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு போட்டியில் ஆறாவது பந்துவீச்சாளரைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்கிறார். அவர் ஒரு சிறந்த பேட்டர், பந்து வீச்சாளர் மற்றும் பீல்டரும் கூட.

டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரையில் கிரிக்கெட் அணிகள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அடுத்த போட்டியில் தோல்வியை தழுவ வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால் அதை சொல்வது ரொம்பவே கஷ்டம்.

இப்போது சிக்கல் என்னவென்றால் இந்திய அணி இந்த தொடரில் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருக்குமா என்பதுதான்? என்னை பொறுத்த வரையில் இந்திய அணிக்கான அந்த வாய்ப்பு வெறும் 30 சதவீதம் மட்டும்தான் உள்ளது என நான் கருதுகிறேன். எனக்கு அது சங்கடத்தை கொடுக்கும் வகையில் உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story