மோசமாக தோல்வி அடையும் இங்கிலாந்து அணியினரை பார்க்க வேடிக்கையாக உள்ளது - சேவாக் கலாய்...!


மோசமாக தோல்வி அடையும் இங்கிலாந்து அணியினரை   பார்க்க வேடிக்கையாக உள்ளது - சேவாக் கலாய்...!
x
தினத்தந்தி 25 Sep 2022 6:42 AM GMT (Updated: 25 Sep 2022 6:49 AM GMT)

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது.

39 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஒரு விக்கெட்டை வைத்துக்கொண்டு கடுமையான சூழலில் விளையாடிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு கடைசி விக்கெட் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது.

ஆட்டத்தின் 43-வது ஓவரின் 4வது பந்தை இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா வீசிய போது அந்த பந்தை ப்ரேயா டேவிஸ் எதிர்கொண்டார் . எதிர் முனையில் நின்ற இங்கிலாந்து அணி வீராங்கனை சார்லீ டீன் நின்றார் .ஆனால் தீப்தி ஷர்மா பந்துவீசுவதற்குள் கிரீஸை தாண்டி பல அடிகள் நகர்ந்து முன்னே சென்றுவிட்டார் சார்லீ டீன் . இதை பயன்படுத்திக்கொண்ட தீப்தி, பந்தை வீசாமல் ஸ்டம்ப்பில் அடித்து சார்லீ டீன்-ஐ அவுட் செய்தார்.இதனை தொடர்ந்து நடுவர் ரீவியூ செய்தபிறகு ஐசிசியின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி அவுட் கொடுக்கப்பட்டது.

இதற்கு இங்கிலாந்து அணி வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் ,ஸ்டூவர்ட் பிராட் ,சாம் பில்லிங்ஸ் ஆகியயோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் சமீபத்தில் ஐசிசி மாற்றிய புதிய விதிமுறைகளில் மன்கட் ரன் அவுட் முறை செல்லும் என்று கூறி இருந்தது. , தற்போது விதிமுறைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் தீப்திக்கு ஷர்மாவுக்கு இந்திய ரசிகர்களிலும் பலர் தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.ஏற்கனவே நாங்கள் புதிதாக ஒன்றைச் செய்ததாக நான் நினைக்கவில்லை. இது ஐசிசியின் விதிகள் என இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹாமன்பிரீத் கவுர் தீப்தி ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் இங்கிலாந்து அணியை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

பல இங்கிலாந்து அணியினர் மோசமாக தோல்வி அடைவது ,பார்க்க வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் அஸ்வின் ,ஜோஸ் பட்லரை இதே முறையில் ரன் அவுட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story