4-வது முறையாக ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் - கே எல் ராகுல் புதிய சாதனை..!!


4-வது முறையாக ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் - கே எல் ராகுல் புதிய சாதனை..!!
x

Image Courtesy : BCCI / IPL 

4 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கே எல் ராகுல் பெற்றுள்ளார்.

கொல்கத்தா,

கொல்கத்தா, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் (எலிமினேட்டர்) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

அணியின் வெற்றிக்காக போராடிய கேப்டன் கே எல் ராகுல் 19-வது ஓவரில் ராகுல் (79 ரன், 58 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

நேற்று நடந்த போட்டியில் 79 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் இந்த சீசனில் 600 ரன்களை கடந்துள்ளார். 15 போட்டிகளில் அவர் 616 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 3 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.


Next Story