ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்..!


ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்..!
x
தினத்தந்தி 5 May 2023 4:22 PM IST (Updated: 5 May 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே.எல் ராகுல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

ஐ.பி.எல்.போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் காயம் அடைந்தார். பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

இதனால் மே 3-ஆம் தேதி நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் கே. எல் ராகுல் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

காயம் ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் தசைநாறு கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே.எல் ராகுல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிபோட்டியில் இருந்து கே.எல். ராகுல் விலகியுள்ளார்.


Next Story