கடைசி டி20: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா


கடைசி டி20: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா
x

ஆஸ்திரலிய அணி 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்ற து.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 42 ரன்களும் , டோனோவன் பெரேரா 48 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் சீன் அபோட் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 191 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக மத்தேயு ஷார்ட், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் மத்தேயு ஷார்ட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த மிட்சேல் மார்ஷ் 15 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினார்.

டிராவிஸ் ஹெட் , ஜோஷ் இங்கிலிஸ் இருவரும் அதிரடியாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.ஜோஷ் இங்கிலிஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் டிராவிஸ் ஹெட் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். அவர் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார்.

இறுதியில் 17.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் ஆஸ்திரலிய அணி 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது.


Next Story