ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு
x

Image : ICC 

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தாயகம் திரும்பும் முனைப்புடன் உள்ளது. அதேவேளையில் நாளை தொடங்கும் ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணி உள்ளது.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி:

சைம் அயூப், அப்துல்லா ஷபியு, ஷான் மசூத் (கேப்டன் ), பாபர் அசாம் , சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, சஜித் கான், அமீர் ஜமால், ஹசன் அலி, மிர் ஹம்சா.


Next Story