சென்னைக்கு எதிரான லீக் போட்டி...புதிய சீருடையில் களம் இறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்...!


சென்னைக்கு எதிரான லீக் போட்டி...புதிய சீருடையில் களம் இறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்...!
x

Image Courtesy: @DelhiCapitals

சென்னை அணிக்கு எதிரான நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் புதிய சீருடை அணிந்து களம் இறங்க உள்ளது.

டெல்லி,

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16வது ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 65 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நாளை டெல்லியில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை களம் இறங்க உள்ளது.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான நாளை நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய சீருடை அணிந்து ஆட உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தொடரில் இதற்கு முன்னதாக மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன. லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் புதிய சீருடையுடன் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.Next Story