சிக்சர் மழை பொழிந்த லக்னோ வீரர்கள்..! ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி
3 விக்கெட் இழப்பிற்கு 19.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
ஐதராபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 58-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது ,
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது
தொடக்க வீரர்களாக அல்மோன்பிரீத் சிங் , அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் அபிஷேக் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களுக்கும் , சிறப்பாக விளையாடிய அல்மோன்பிரீத் சிங் 36 ரன்களுக்கும் வெளியேறினர்.
பின்னர்'வந்த மார்க்ரம் 28 ரன்கள் , கிளென் பிலிப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். தொடர்ந்து ஹென்ரிச் கிளாசன் , அப்துல் சமத் இணைந்து அதிரடி காட்டினர்.
இருவரும் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக விளையாடிய கிளாஸன் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் சமத் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 183 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மேயர்ஸ் , டி காக் களமிறங்கினர். மேயர்ஸ் 2 ரன்களிலும் , சிறப்பாக ஆடிய டி காக் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த பிரேரக் மன்கட் , ஸ்டாய்னிஸ் இருவரும் இணைந்து சிக்சருக்கு பறக்க விட்டனர் . அதிரடி காட்டினர். ஸ்டாய்னிஸ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பூரன் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார் . மறுமுனையில் சிறப்பாக ஆடிய மன்கட் அரைசதம் அடித்தார்.
இறுதியில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 19.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.