பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு


பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு
x

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

பெங்களூரு,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டூபிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story