டிஎன்பிஎல்: திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கோவை...!


டிஎன்பிஎல்: திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கோவை...!
x

திண்டுக்கல்லை வீழ்த்தி கோவை டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சேலம்,

நடப்பு டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான குவாலிபையர் போட்டி இன்று நடைபெற்றது. இதில், லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய கோவை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சச்சின் அதிகபட்சமாக 46 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய முகிலேஷ் 27 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் திண்டுக்கல் களமிறங்கியது. ஆனால், கோவை அணியின் சிறப்பான பந்துவீச்சால் திண்டுக்கல் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

ஆனால், இறுதிக்கட்டத்தில் போராடிய சரத்குமார் 26 பந்துகளில் 8 சிக்சர்கள் உள்பட 62 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இறுதியில் திண்டுக்கல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் திண்டுக்கல்லை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் லைகா கோவை கிங்ஸ் நுழைந்தது.


Next Story