ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய டெஸ்ட் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய டெஸ்ட் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் விளையாடும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

மும்பை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து இந்தியாவுக்கு வருகை வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இவ்விரு தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நீடிக்கிறார். ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு 20 ஓவர் போட்டி அணியில் இடமில்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த பிரித்வி ஷாவுக்கு இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய 20 ஓவர் போட்டி அணி: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்.

இந்திய ஒரு நாள் போட்டி அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பரத், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்புகிறார். அதே சமயம் காயத்தில் இருந்து முழுமையாக மீளாத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ஆர்.அஸ்வின், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.


Next Story