கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்...புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ அணி


கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்...புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ அணி
x

Image Courtesy: @LucknowIPL

லக்னோ அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை மாலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

லக்னோ,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி 18.1 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். இதையடுத்து லக்னோ அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை மாலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் நாளை நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி கால்பந்தாட்ட கிளப் அணியான மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த புதிய ஜெர்சியில் களம் இறங்க உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக லக்னோ அணி நிர்வாகம் புதிய ஜெர்சியில் வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரியமையாளராக ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தலைவர் சஞ்சீவ் கோயங்கா உள்ளார். இதன் காரணமாக லக்னோ அணி நாளை நடைபெறும் ஆட்டத்தில் புதிய ஜெர்சியில் களம் இறங்க உள்ளது.



Next Story