ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல்:  டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 21 May 2022 2:00 PM GMT (Updated: 2022-05-21T19:31:13+05:30)

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.

மும்பை,

15-வது ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளியை எட்டுவதுடன் 'ரன்-ரேட்' அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விடும். ஏனெனில் ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் பெங்களூரு அணியின் ரன் ரேட்டை (-0.253) விட டெல்லி அணியின் ரன்-ரேட் (+0.255) உயர்வாக இருக்கிறது.

மாறாக டெல்லி தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும். அதேநேரத்தில் பெங்களூரு அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கும். எனவே இந்த ஆட்டம் டெல்லி அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும். இதனால் இந்த போட்டியின் முடிவு பெங்களூரு அணிக்கும் முக்கியமாகும் .இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் இன்று மும்பை அணியின் வெற்றிக்கு காத்திருக்கிறார்கள்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது. முன்னதாக, போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.


Next Story