யூசுப் பதானை அடிக்க பாய்ந்த ஜான்சன்... டி20 கிரிக்கெட்டில் அதிர்ச்சி


யூசுப் பதானை அடிக்க பாய்ந்த ஜான்சன்... டி20 கிரிக்கெட்டில் அதிர்ச்சி
x

image screengrap from the video tweeted by @CricCrazyNIKS

லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் யூசுப் பதானும், மிட்செல் ஜான்சனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜோத்பூர்,

லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின்போது, யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு இருவரும் கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர். அப்போது ஜான்சன் யூசுப்பைத் தள்ளினார். இதையடுத்து இருவரையும் பிரிக்க நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story