உலக கோப்பை மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்தது மனதை காயப்படுத்தியது - முகமது ஷமி


உலக கோப்பை மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்தது மனதை காயப்படுத்தியது - முகமது ஷமி
x

உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 240 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில் உலக கோப்பை மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் குறித்து இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியதாவது,

உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது. உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்ல போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கோப்பை மீது கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story