நோ பால் போடாமல் பந்துவீசுவது எப்படி..? அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆலோசனை வழங்கிய முகமது கைப்


நோ பால் போடாமல் பந்துவீசுவது எப்படி..? அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆலோசனை வழங்கிய முகமது கைப்
x

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், ஒரு நோ பால் வீசியதுடன் 27 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கினார்.

டெல்லி,

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுலிங்கில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் நோ பால் வீசுவது குறித்து இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைப் கூறுகையில்,-அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும்.

அர்ஷ்தீப்புக்கு நீண்ட ரன்-அப் உள்ளது. அங்கே சக்தியை வீணடிக்கிறார். அவர் வீசும் நோ-பால்களுக்கு முக்கிய காரணம் அவரது நீண்ட ரன்-அப். எனவே, அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்." இவ்வாறு கைப் கூறினார்.


Next Story