வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் விலகல்
x

காயம் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிராஜ் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயம் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிராஜ் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது

1 More update

Next Story