முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்?.. உண்மை என்ன..?


முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்?.. உண்மை என்ன..?
x

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியும், பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இணையத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுசென்றவர். இந்தத் தொடரில் இவருடைய பங்களிப்பும் பேசப்பட்டது. தற்போது காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இவர் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி இவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவித்ததுடன், வழக்குகளும் பதிவு செய்துள்ளார். அதனால் அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்சமயம் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல கடந்த சில மாதங்கள் முன்பு சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். சோயப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்ததை அடுத்து சானியா அந்த முடிவை எடுத்தார். பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை சோயப் மாலிக் மூன்றாவதாக திருமணம் செய்தார். இதை அடுத்து சோயப் மாலிக் - சானியா மிர்சா பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில், சானியாவும், ஷமியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக எண்ணி பலரும் அந்த செய்தியை பரப்பி வந்தனர்.

ஆனால் அது சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் சோயப் மாலிக்கின் முகத்தை எடுத்து விட்டு, ஷமியின் முகத்தை மாற்றி வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. சில விஷமிகள் இவ்வாறு புகைப்படத்தை உருவாக்கி வதந்தியை பரப்பி உள்ளனர்.

இந்த வதந்தி குறித்து பேசிய சானியா மிர்சாவின் தந்தை, "இந்த வதந்திகள் சுத்த முட்டாள்தனமானது. சானியா மிர்சா இதுவரை முகமது ஷமியை நேரில் பார்த்ததே இல்லை" எனக் கூறினார்.


Next Story