ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் என்னை அணுகிய சூதாட்ட நபர் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புகார்


ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் என்னை அணுகிய சூதாட்ட நபர் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புகார்
x

அணியின் உள் தகவல்களை பெற தன்னை நாடியதாக பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ஏசியூ) இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்.

மும்பை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான எஸ் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு மே மாதம் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக முன்னாள் சிஎஸ்கே அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதில் இருந்து பிசிசிஐ அதன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த நபர் ஒருவர், அணியின் உள் தகவல்களை பெற தன்னை நாடியதாக பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ஏசியூ) இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியின் போது, முகமது சிராஜை ஒரு நபர் அணுகியதாகவும், சிராஜ் உடனடியாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தை தெரிவித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story