ஓர் ஆண்டில் அதிக அரைசதம்: ரிக்கிபாண்டிங்கின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்


ஓர் ஆண்டில் அதிக அரைசதம்: ரிக்கிபாண்டிங்கின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்
x

அபாரமாக ஆடிய பாபர் அசாம் பந்தை சிக்சருக்கு விரட்டி தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார்.

கராச்சி,

நியூசிலாந்து அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் பாகிஏதான் அணி 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்துள்ளது. பாபர் அசாம் 161 ரன்களுடன் அவுட் ஆகாமல் உள்ளார்.

தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய 28 வயதான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.

*பாபர் அசாம் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். ஜோ ரூட்டை (1,098 ரன், 15 டெஸ்ட்) பின்னுக்கு தள்ளிய அவர் 1,170 ரன்களுடன் (9 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார்.

* மூன்று வடிவிலான கிரிக்கெட் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) போட்டியையும் சேர்த்து பாபர் அசாம் இந்த ஆண்டில் 25 முறை 50-ரன்களுக்கு மேல் (17 அரைசதம் மற்றும் 8 சதம்) எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக முறை 50-க்கு மேல் ரன் அடித்தவரான ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங்கின் (2005-ம் ஆண்டில் 24 முறை) சாதனையை முறியடித்தார்.

*இந்த ஆண்டில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் பாபர் அசாம் இதுவரை 2,542 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரரான முகமது யூசுப்பின் (2006-ம் ஆண்டில் 2,435 ரன்) சாதனையை முந்தினார்.


Next Story