சாண்டோ அபார சதம்: 3-வது நாள் முடிவில் வங்காளதேச அணி 212 ரன்கள் குவிப்பு


சாண்டோ அபார சதம்:  3-வது நாள் முடிவில் வங்காளதேச அணி  212 ரன்கள் குவிப்பு
x

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதம் அடித்து அசத்தினார்

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ- மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.40 ரன்களில் மொமினுல் ஹக் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனையடுத்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சதம் அடித்து சத்தினார். தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது.

.


Next Story