ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்..!
டெல்லி அணியின் கேட்பனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த வருட ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதரபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது.
இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான புதிய சீருடையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருகிறார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேட்பனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
after looking at our #IPL2023 threads ❤#YehHaiNayiDilli ki Nayi Jersey @davidwarner31 @akshar2026 @PrithviShaw pic.twitter.com/ofoLlwrJm0
— Delhi Capitals (@DelhiCapitals) March 19, 2023