இதை செய்யத் தேவையில்லை மிஸ்டர் ஹர்ஷித் ராணா - சுனில் கவாஸ்கர் விமர்சனம்


இதை செய்யத் தேவையில்லை மிஸ்டர் ஹர்ஷித் ராணா - சுனில் கவாஸ்கர் விமர்சனம்
x
தினத்தந்தி 24 March 2024 4:30 AM GMT (Updated: 24 March 2024 4:33 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷித் ராணா அதை கொண்டாடிய விதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பேட்டிங் செய்த மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷித் ராணா அதை கொண்டாடிய விதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெறும் 22 வயதாகும் இளம் வீரரான அவர் இந்தியாவுக்காக விளையாடிய சீனியர் வீரரான மயங்க் அகர்வால் முகத்தின் முன்பாக கையில் முத்தமிட்டு அதை காற்றில் பறக்க விட்டு கொண்டாடியது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனால் அதிருப்தியடைந்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேட்ஸ்மேன்கள் இப்படி ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும்போது உங்களுக்கு முத்தமிட்டால் நன்றாக இருக்குமா? நீங்கள் தாங்குவீர்களா என்ற வகையில் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"ஆரம்பத்தில் மயங் அகர்வால் பவுண்டரிகள் அடித்தபோது அவரிடம் இது போன்ற எதையும் பார்க்க முடியவில்லை. இதை செய்யத் தேவையில்லை மிஸ்டர் ராணா. கிரிக்கெட்டில் இது ஒரு விக்கெட் மட்டுமே. பேட்ஸ்மேன் ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும்போது உங்களிடம் இப்படி செய்யவில்லை. நீங்கள் இதை செய்யாமல் கிரிக்கெட்டை மட்டும் விளையாடலாம். விக்கெட்டை எடுத்தால் அதை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். உங்கள் அணியுடன் சேர்ந்து கொண்டாடுங்கள். ஆனால் எதிரணி வீரரிடம் இப்படி செய்யத் தேவையில்லை" என்று கூறினார்.


Next Story