"ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம்..." - ரவி சாஸ்திரி கருத்து


ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம்... - ரவி சாஸ்திரி கருத்து
x

ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம் என ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் ஓவர்களை குறைப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்;-

"ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாக மாற்றுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒருநாள் கிரிக்கெட்டின் பயணம் 60 ஓவர்களாக தொடங்கியது. 1983-இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது விளையாடிய ஓவர்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது.

அப்போது 20 முதல் 40 வரையிலான ஓவர்கள் மிகவும் சோதிக்கக்கூடியவையாக இருந்தன. அதனால் ஓவர்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்கப்பட்டது. அந்த மாற்றம் நிகழ்ந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அதனால் பழைய பாணியில் 50 ஓவர்களை 40 ஓவர்கள் என குறைக்கலாம். நாம் முன்னோக்கி சிந்திப்பது அவசியம்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story