சக வீரர் காதலியுடன் அந்தரங்க வீடியோ:பாபர் அசாமுக்கு "நமது ஹீரோ, நமது பெருமை" ரசிகர்கள் ஆதரவு
பாபராக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமாக இருந்தாலும் சரி, இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிட வில்லை.
புதுடெல்லி:
அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், தற்போது பாலியல் குற்றச்சாட்டில் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்து உள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி, தனது சொந்த மண்ணில் அடுத்தடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர்களை இழந்ததால், சில வீரர்களை அணியில் இருந்து நீக்கவேண்டும் என பலர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாமை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்தன.
இந்த நிலையில் பாபர் அசாம் தனது சக வீரரின் காதலியுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாபர் அசாமின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் ஒரு பெணுடன் பேசும் அந்தரங்க பேச்சுக்கள் ஆன்லைனில் வெளிவந்ததை அடுத்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
'நீ என்னுடன் தொடர்ந்து ஆபாசமாக பேசிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்தால், உனது காதலனை நான் அணியிலிருந்து நீக்க மாட்டேன்'' என பாபர் அசாம் உறுதியளிக்கிறார்.
வீடியோவில் "நான் பாகிஸ்தான் அணியின் வீரர் ஒருவரின் காதலி, என்னை அணுகிய பாபர் அசாம் உனது காதலர் அணியில் இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து இதே போல் என்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்" என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் பாபர் அசாம் பேசும் வீடியோவையும் அதில் இணைத்துள்ளார்.
எந்த ஆதாரமும் இல்லாமல் பாபருக்கு எதிராக பரிதாபகரமான பிரச்சாரத்தை நடத்தியதற்காக இந்திய பத்திரிகையாளரை முட்டாள் என்று விமர்சிக்கப்படுகிறார்கள்.
எந்த வீரரின் காதலி எனத் தெரியவில்லை. இந்நிலையில், அந்த வீடியோவில் தோன்றுவது பாபர் அசாம் இல்லை. வேறு ஒருவரின் வீடியோவை போலியாக உருவாக்கி பிரச்னையை கிளப்பியுள்ளனர் என பாபர் அசாமுக்கு ஆதரவாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் பாபரை ஆதரித்துள்ளனர், பாகிஸ்தான் ரசிகர்கள் #StayStrongBabarAzam மற்றும் #BehindYouSkipper போன்ற ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் கூறப்பட்ட கூற்றுகளை பாபர் புறக்கணிப்பதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் தனது புகைப்படத்தை "சந்தோஷமாக இருப்பதற்கு அதிகமாக எடுத்துக்கொள்ளவில்லை." என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.
பாபர் அசாம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில், அசாம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து கர்ப்பமாக்கியதாக ஒரு பெண் புகார் கூறியிருந்தார்.பின்னர், அந்த பெண் கிரிக்கெட் வீரர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும்
பாபராக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமாக இருந்தாலும் சரி, இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடவில்லை.