திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள்


திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் அணியின்  வீராங்கனைகள்
x

திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள்

லண்டன்

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீராங்கனைகளான கேத்ரின் பிரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கேத்ரின் பிரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் இருவரும் 2017 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள். இருவரும் மைதானத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தார்கள்.

நீண்ட நாட்கள் நண்பர்களாகப் பழகி வந்த இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 2019 -ல் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இவர்களின் திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெற்ற இவர்களின் திருமண விழாவில் கேப்டன் ஹீதர் நைட், டேனி வியாட், இசா குஹா, ஜென்னி கன் உள்ளிட்ட இங்கிலாந்து அணியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருவரின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, "திருமணம் செய்து கொண்ட கேத்ரின் பிரண்ட் மற்றும் நாட் ஸ்கிவர் ஆகியோருக்கு எங்கள் அன்பான வாழ்த்துகள்" என்று வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது.

திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள்


1 More update

Next Story