சச்சின் அல்ல...இவர் தான் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் - பாகிஸ்தான் வீரர்


சச்சின் அல்ல...இவர் தான் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் - பாகிஸ்தான் வீரர்
x

Image Courtacy: ICCTwitter

நடந்து முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்தது.

கராச்சி,

நடந்து முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் ரோகித் மற்றும் விராட் கோலியின் பேட்டிங் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

மைதானத்தில் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டு கேப்டன் ரோகித் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் இந்தியாவில் சிறந்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தான் என கூறியுள்ளார்.

சச்சின் மற்றும் கோலி இருவரில் சிறந்தவர் யார் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் அளித்த பதிலில்,

நான் ரோகித் சர்மா என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்யும் விதம் அபாரமாக இருக்கிறது. அனைத்து விதமான ஷாட்டுகளையும் கொண்டுள்ள காரணத்தாலேயே அவரை ஹிட்மேன் என்று அனைவரும் அழைக்கிறோம்.

குறிப்பாக ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 264 ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. அத்துடன் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். எனவே என்னை பொறுத்த வரை அவர் தான் சிறந்த வீரர். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story