இறுதிப்போட்டியில் விளையாடியதே எங்களுக்கு சிறந்த சாதனை தான் - இந்திய கேப்டன் ரோகித் சர்மா...!


இறுதிப்போட்டியில் விளையாடியதே எங்களுக்கு சிறந்த சாதனை தான் - இந்திய கேப்டன் ரோகித் சர்மா...!
x
தினத்தந்தி 11 Jun 2023 6:09 PM IST (Updated: 11 Jun 2023 8:14 PM IST)
t-max-icont-min-icon

உண்மையில் 2 இறுதிப்போட்டிகளில் விளையாடியதே எங்களுக்கு சிறந்த சாதனை தான் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்று சாதனை படைத்தது. இந்திய அணி படுதோல்வியடைந்தது.

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

மைதான சூழ்நிலையில் டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது எங்கள் சிறப்பான தொடக்கம் என நான் நினைத்தேன். முதல் செஷனில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். ஆனால், அதன்பின் நாங்கள் இறங்கிவிட்டோம். ஆஸ்திரேலிய பேட்டிஸ்மென்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்டீவ் ஸ்மித் உடன் சேர்ந்து ஹெட் சிறப்பாக ஆடினார். மீண்டு வருவது மிகவும் கடினம் என்று எங்களுக்கு தெரியும். ஆனாலும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். நாங்கள் இறுதிவரை போராடினோம்.

நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தோம். 2 இறுதிப்போட்டிகளில் விளையாடியதே எங்களுக்கு மிகச்சிறந்த சாதனை தான். ஆனால், வெற்றிக்கான ஒருபடி முன்னேற வேண்டுமென நாங்கள் நினைத்தோம். இந்த இடத்திற்கு வர நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக உழைத்ததை நீங்கள் புறந்தள்ளிவிட முடியாது. ஒட்டுமொத்த அணியாக சிறப்பான முயற்சி மேற்கொண்டோம். ஆனால், துரதிஷ்டவசமாக இறுதிப்போட்டியில் எங்களால் வெல்லமுடியவில்லை. ஆனாலும், எங்கள் தலையை உயர்த்தி தொடர்ந்து போராடுவோம்' என்றார்.


Next Story