பூரன் அதிரடி ஆட்டம்...லக்னோ 176 ரன்கள் குவிப்பு..!


பூரன் அதிரடி ஆட்டம்...லக்னோ 176 ரன்கள் குவிப்பு..!
x

Image Courtesy: @IPL 

ஐபிஎல் தொடரில் இதுவரை குஜராத், சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

கொல்கத்தா,

16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.

இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கரண் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் கரண் சர்மா 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய மன்கட் 26 ரன், ஸ்டோய்னிஸ் 0 ரன், க்ருணால் பாண்ட்யா 9 ரன், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 28 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த பூரன், பதோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் பூரன் 28 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் அரைசதம் அடித்த நிலையில் 58 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

லக்னோ அணி தரப்பில் பூரன் 58 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆட உள்ளது.


Next Story