பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி : ஆட்டம் போட்டு ஆரவாரத்துடன் கொண்டாடிய பெங்களூரு அணியினர்..!


பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி : ஆட்டம் போட்டு  ஆரவாரத்துடன் கொண்டாடிய பெங்களூரு அணியினர்..!
x

Image Courtesy : RCB Twitter 

நேற்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி களமிறங்கியது

ஆனால் இந்த போட்டியில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.

மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. டெல்லி தோல்வியடைந்ததால் 16 புள்ளிகள் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-வது இடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 4-வது அணியாக பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்நிலையில் மும்பை-டெல்லி இடையே நடைபெற்ற போட்டியை . பெங்களூரு அணி வீரர்கள் மற்றும் அணி பயியிற்சியாளர், நிர்வாகிகள் என அனைவரும் தாங்கள் தங்கியுள்ள ஓட்டலில் குழுவாக இருந்து கண்டுகளித்தனர் .

இந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது .இதனால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது .

இதனை கொண்டாடும் விதமாக பெங்களூரு அணியினர் .ஆட்டம் போட்டு ,ஆரவாரத்துடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை கொண்டாடினர் .இதனை அந்த அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது .

1 More update

Related Tags :
Next Story