சதம் விளாசிய குயின்டன் டி காக்...! ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா


சதம் விளாசிய குயின்டன் டி காக்...! ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா
x

தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதியை எட்டுவதற்கு குறைந்தது 6 வெற்றிகள் அவசியமாகும்.இந்நிலையில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 35 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ,டி காக் 109ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனையத்து மார்க்ரம் - கிளாசன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 56 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சிலும், கிளாசன் 29 ரன்னில் ஹசில்வுட் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Next Story