அதிரடியில் மிரள வைத்த ரஹானே...! 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்


அதிரடியில் மிரள வைத்த ரஹானே...! 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்
x
தினத்தந்தி 8 April 2023 10:04 PM IST (Updated: 8 April 2023 11:23 PM IST)
t-max-icont-min-icon

பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கின் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோதுகின்றன

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.மும்பை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , சான்ட் னர் , துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 158ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.

தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் , கான்வே களமிறங்கினர்.தொடக்கத்தில் சென்னை அணியின் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரஹானே அதிரடி காட்டினார்,பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். குறிப்பாக மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர் , 4 பவுண்டரி பறக்க விட்டார். தொடர்ந்து ஆடிய அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.தொடர்ந்து ஆடிய அவர் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

1 More update

Related Tags :
Next Story