ராகுல் திரிபாதி அதிரடி அரைசதம்..! பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தி ஹைதராபாத் அசத்தல் வெற்றி


ராகுல் திரிபாதி அதிரடி  அரைசதம்..! பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தி ஹைதராபாத் அசத்தல் வெற்றி
x
தினத்தந்தி 9 April 2023 11:01 PM IST (Updated: 9 April 2023 11:04 PM IST)
t-max-icont-min-icon

2 விக்கெட் இழப்பிற்கு 145ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

ஹைதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது.அந்த அணியின் பிரப்சிம்ரன் ரன் எதுவும் எடுக்காமலும் , மேத்யூ ஷார்ட் 1 ரன்கள் , ஜிதேஷ் சர்மா 4 ரன்கள் , சிக்கந்தர் ராசா 5 ரன்கள் , ஷாருக் கான் 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சாம் கரன் சிறிது நேரம் அதிரடி காட்டி 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்கள் விழுந்தாலும் மறுபுறம் கேப்டன் ஷிகர் தவான் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய அவர் அரைசதம்அடித்தார்.தொடர்ந்து அவர் அதிரடியாக விளையாடினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் 143 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய தவான் 99 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியில் மயங்க் மார்கண்டே, 4 விக்கெட்டும் , உம்ரன் மாலிக் 2 விக்கெட்டும் மார்கோ ஜான்சன்2 விக்கெட் , புவனேஷ்வர் குமார் 1 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 144 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 13 ரன்களும் , மயங்க் அகர்வால் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ராகுல் திரிபாதி , மார்க்ரம் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில்17.1 ஓவர்கள் முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 145ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திரிபாதி 74ரன்கள் , மார்க்ரம்37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.


Next Story