பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு...!


பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு...!
x

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

கவுகாத்தி,

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை ஐபிஎல் தொடரில் பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் 2வது வெற்றியை யார் பதிவு செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.


Next Story