ராணா , ரிங்கு சிங் அதிரடி..! கொல்கத்தா அணி 171 ரன்கள் குவிப்பு


ராணா , ரிங்கு சிங் அதிரடி..! கொல்கத்தா அணி 171 ரன்கள் குவிப்பு
x

ஹைதராபாத் சார்பில் மார்கோ ஜான்சன் , நடராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஹைதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கேப்டன் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, கேப்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் கோதாவில் குதிக்கின்றன

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் , பின்னர் வெங்கடேஷ் ஐயர் 7ரன்களிலும், ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் நிதிஸ் ராணா , ரிங்கு சிங் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராணா 42ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து வந்த ரசல் அதிரடி காட்டி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ரிங்கு சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்களுக்கு 9விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 171ரன்கள் எடுத்து . ஹைதராபாத் சார்பில் மார்கோ ஜான்சன் , நடராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


Next Story