ரஞ்சிக் கோப்பை: அசாமை வீழ்த்தியது தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றி
தமிழகம் தரப்பில் அஜித் ராம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சென்னை,
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சென்னையில் நடைபெற்ற குரூப்-பி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அசாமை வென்றது. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய அசாம் அணி 266 ரன்களில் ஆல் அவுட் ஆகி, பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை ஆடிய அசாம், 204 ரன்களில் சுருண்டது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Tags :
Next Story