'20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தில் இருந்து மீள்வது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்' - கவாஸ்கர்


20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தில் இருந்து மீள்வது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் - கவாஸ்கர்
x

20 ஓவர் போட்டியில் ஆடிய இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப மாறுவது சவாலாக இருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றுள்ளது.

இந்த போட்டி குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'இந்திய வீரர்களில் புஜாராவை தவிர்த்து மற்ற அனைவரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி விட்டு லண்டன் சென்றுள்ளனர். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நீண்ட வடிவிலான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது தான் வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. அஜிங்யா ரஹானே இங்கிலாந்து மண்ணில் நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவசாலி. 5-வது வரிசையில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்' என்றார்.


Next Story