கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை பிரதிபலிக்கிறது - பிசிசிஐ மீது அப்ரிடி சாடல்....!


கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை பிரதிபலிக்கிறது - பிசிசிஐ மீது அப்ரிடி சாடல்....!
x
தினத்தந்தி 19 Oct 2022 6:46 AM GMT (Updated: 19 Oct 2022 7:37 AM GMT)

ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்.

கராச்சி,

அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று ஜெய் ஷா குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் ஜெய் ஷா கூறி இருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் அணி முன்னாள் வீர்ரகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது ;

கடந்த 12 மாதங்களில் இரு தரப்புக்கும் இடையே சிறந்த தோழமை ஏற்படுத்தப்பட்டு, 2 நாடுகளில் நல்ல உணர்வை ஏற்படுத்திய நிலையில், டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ செயலாளர் ஏன் இந்த அறிக்கையை வெளியிடுகிறார் ? இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.


Next Story