ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை...!!
ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு,
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.
இதில் ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் தனது 248-வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது வீரராக ரோகித் உள்ளார். முதல் 5 இடங்களில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, டிராவிட்,தோனி ஆகியோர் உள்ளனர்.
Related Tags :
Next Story