எஸ்.ஏ.20 ஓவர் லீக்; டாலா அபார பந்துவீச்சு..கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சூப்பர் ஜெயன்ட்ஸ் அசத்தல் வெற்றி


எஸ்.ஏ.20 ஓவர் லீக்; டாலா அபார பந்துவீச்சு..கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சூப்பர் ஜெயன்ட்ஸ் அசத்தல் வெற்றி
x

Image Courtesy: @SA20_League

சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தரப்பில் ஜூனியர் டாலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

டர்பன்,

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தரப்பில் ப்ரீட்ஸ்கே 73 ரன்கள் எடுத்தார். கேப்பிடல்ஸ் அணி தரப்பில் டுபாவில்லன், சேனுரான் முத்துசாமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது. கேப்பிடல்ஸ் தரப்பில் வில் ஜேக்ஸ் 41 ரன் எடுத்தார். சூப்பர் ஜெயன்ட்ஸ் தரப்பில் ஜூனியர் டாலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Next Story