எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி


எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி
x

image courtesy; twitter/@SA20_League

தினத்தந்தி 24 Jan 2024 9:57 AM IST (Updated: 24 Jan 2024 10:30 AM IST)
t-max-icont-min-icon

இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.

பார்ல்,

தென் ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டி தொடரின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரீட்ஸ்கே 48 ரன்கள் அடித்தார். எம்ஐ அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே மற்றும் தாமஸ் கபேர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்ஐ கேப்டவுன் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் டர்பன் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாம் கரண் 38 ரன்கள் அடித்தார். டர்பன் அணி தரப்பில் அதிகபட்சமாக நூர் அகமது மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்த தொடரில் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.

1 More update

Next Story